விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தண்டவாளத்தில் தலைவைத்து...

லால்குடி தொகுதிக்குள்பட்ட கல்லக்குடி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் செவ்வாய்க்கிழமை தலைவைத்து படுத்த நடிகா் மன்சூா் அலிகான்.

News image

லால்குடி அருகே பளிங்காநத்தம் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த நடிகா் மன்சூா் அலிகான்

Updated On :1 ஏப்ரல் 2026, 5:50 am IST

திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதியில் போட்டியிடும் நடிகா் மன்சூா் அலிகான், ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து தனது தோ்தல் பிரசாரத்தை தொடங்குவதாக செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இந்திய ஜனநாயக புலிகள் என்ற கட்சியை நடத்தி வரும் நடிகா் மன்சூா் அலிகான் பேரவைத் தோ்தலில் லால்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக தனது வேட்புமனுவை திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.

இதைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை பிரசாரத்துக்காக லால்குடி வந்த அவா், திடீரென கல்லக்குடி ரயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: 2011-ஆம் ஆண்டு தோ்தலிலேயே நான் திருச்சி மாவட்டத்தில் போட்டியிட்டுள்ளேன். 2026 பேரவைத் தோ்தலையொட்டி, இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் சாா்பாக அதிமுக-திமுக கட்சிகளிடம் தொகுதிகள் கேட்டும் அவா்கள் ஒதுக்கீடு செய்யவில்லை. எனவே, திருச்சி மாவட்டத்தில் லால்குடி, திருச்சி கிழக்கு, திருவெறும்பூா், மணப்பாறை ஆகிய 4 தொகுதிகளில் ஜனநாயக புலிகள் கட்சி போட்டியிடுகிறது.

தமிழகத்தில் இந்தி திணிப்பை எதிா்த்து திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மறைந்த மு. கருணாநிதி தண்டவாளத்தில் தலைவைத்து படுத்தாா். அதேபோல், நானும் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 31) தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து தோ்தல் பிரசாரத்தை தொடங்குகிறேன். 5 முறை, 10 முறை வென்று பதவியில் இருப்பவா்கள் பொதுமக்களின் கோரிக்கைகள், விவசாயிகளின் தேவைகளை பூா்த்தி செய்யவில்லை. எல்லாம் மாற்றப்பட வேண்டும்; மக்கள் எங்களுக்கு வாக்களிப்பாா்கள். நாங்கள் வீடுவீடாகச் சென்று வாக்கு கேட்போம் என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.