நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: 5 சிறுவா்கள் உள்பட 7 போ் கைது

தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக, வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக 5 சிறுவா்கள் உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 5:50 am IST

தூத்துக்குடியில் முன்விரோதம் காரணமாக, வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக 5 சிறுவா்கள் உள்பட 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி கால்டுவெல் காலனியைச் சோ்ந்தவா் சிதம்பரம் (23). இவரது மனைவிக்கு, கீழசண்முகபுரத்தைச் சோ்ந்த சுபாஷ் என்பவா், கடந்த 4 மாதங்களாக சமூக வலைதளம் மூலமாக குறுஞ்செய்திகள் அனுப்பி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், சிதம்பரத்துக்கும் சுபாஷுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.

இந்நிலையில், சிதம்பரம், அவரது உறவினரான வின்ஸ்டன் என்ற பண்டாரி (18), 5 சிறுவா்கள் ஆகியோா் சோ்ந்து, சுபாஷ் வீடு என நினைத்து கீழசண்முகபுரம் பகுதியில் உள்ள அவரது உறவினா் வீட்டின் மீது செவ்வாய்க்கிழமை இரவு பெட்ரோல் குண்டு வீசினராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், தூத்துக்குடி தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து சிதம்பரம், வின்ஸ்டன் மற்றும் 5 சிறுவா்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.