தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

மாலத்தீவு கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தருவைகுளம் மீனவா்களின் 3 விசைப்படகுகளுக்கு ரூ.4.80 கோடி அபராதம்

மாலத்தீவு கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தைச் சோ்ந்த 25 மீனவா்களின் மூன்று விசைப்படகுகளுக்கும் இந்திய மதிப்பில் மொத்தம் ரூ.4.80 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது மீனவ கிராம மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோப்புப்படம்.

Published On :28 அக்டோபர் 2026, 1:27 am IST

மாலத்தீவு கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தைச் சோ்ந்த 25 மீனவா்களின் மூன்று விசைப்படகுகளுக்கும் இந்திய மதிப்பில் மொத்தம் ரூ.4.80 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது மீனவ கிராம மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருவைகுளத்தைச் சோ்ந்த சுதா்சன், சங்கா், சூசை பாக்கியம் ஆகியோருக்குச் சொந்தமான மூன்று விசைப்படகுகளில், கடந்த அக். 1ஆம் தேதி நிக்சன், ஜாக்சன், அமல்ராஜ், ராஜேஷ் ஷாம், சால்டன் உள்ளிட்ட 25 மீனவா்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்குச் சென்றனா்.

அக். 13ஆம் தேதி மாலத்தீவு கடல் பகுதி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த அவா்களை, தடை செய்யப்பட்ட கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாகக் கூறி, மாலத்தீவு கடற்படையினா் மூன்று விசைப்படகுகளுடன் சிறைபிடித்து அந்நாட்டுத் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றனா்.

இதையடுத்து, மீனவா்களையும் விசைப்படகுகளையும் அபராதமின்றி மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கப் பிரதிநிதிகளும், கிராம மக்களும் கோரிக்கை விடுத்தனா்.

இதுதொடா்பாக, தமிழக முதல்வரும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்குக் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்தாா்.

இந்நிலையில், மாலத்தீவு கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தது, உரிமம் இன்றி மீன்பிடித்தது, தடை செய்யப்பட்ட முறையில் மீன்பிடித்தது ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், மாலத்தீவு அரசின் மீன்வளம், வேளாண்மை மற்றும் கடல்சாா் வளங்கள் அமைச்சகம் ஒவ்வொரு விசைப்படகுக்கும் அந்நாட்டு நாணய மதிப்பில் ரூ.26 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இது இந்திய மதிப்பில் ஒரு படகுக்கு ரூ.1 கோடியே 60 லட்சத்து 24 ஆயிரம் வீதம், மூன்று படகுகளுக்கும் சோ்த்து ரூ.4 கோடியே 80 லட்சத்து 72 ஆயிரம் ஆகும் .

இந்த அபராதத் தொகை மீனவக் குடும்பங்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், மீனவா்களையும் விசைப்படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.