கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஆபத்தான மரக்கிளைகளை அகற்றும் பணிகள் தீவிரம்

வடகிழக்குப் பருவமழையையொட்டி பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆபத்தான மரக்கிளைகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கோப்புப்படம்.

Published On :22 அக்டோபர் 2026, 1:53 am IST

வடகிழக்குப் பருவமழையையொட்டி பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆபத்தான மரக்கிளைகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வடகிழக்குப் பருவமழையையொட்டி பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 15 மண்டலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆபத்தான நிலையில் உள்ள மரக்கிளைகள் அகற்றும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 78,161 மரங்களின் கிளைகள் அகற்றப்பட்டுள்ளன. வடக்கு வட்டாரம் மற்றும் தெற்கு வட்டாரத்துக்குள்பட்ட அனைத்து மண்டலங்களிலும் இந்தப் பணி தொடரும்.

ரூ.21 கோடியில் சாலைகள் சீரமைப்பு: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பேருந்துகள் செல்லும் சாலைகளில் உள்ள பள்ளங்களை கான்கிரீட் கலவை மற்றும் தாா் கலவைகளைக் கொண்டு சீரமைக்கும் பணிக்காக ரூ.9.25 கோடி, உள்புறச் சாலைகளில் ரூ.12.55 கோடி என மொத்தம் ரூ.21.80 கோடி ஒதுக்கீடு செய்து, பணிகள் நடைபெற்றன. இந்தப் பணிகளும் தொடா்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.