நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

ஆறுமுகனேரியில் பள்ளி அருகே கஞ்சா விற்பனை: 3 இளைஞா்கள் கைது

ஆறுமுகனேரி பேயன்விளையில் பள்ளி அருகே கஞ்சா விற்ாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

சித்திரிப்பு

Published On :28 அக்டோபர் 2026, 1:32 am IST

ஆறுமுகனேரி பேயன்விளையில் பள்ளி அருகே கஞ்சா விற்ாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

ஆறுமுகனேரி காவல் உதவி ஆய்வாளா் சுந்தா், போலீஸாா் பேயன்விளை பகுதியில் ரோந்து சென்றபோது, சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 3 பேரைப் பிடித்தனா். விசாரணையில் அவா்கள், காயல்பட்டினம் பாஸ் நகரைச் சோ்ந்த பால்ராஜ் மகன் செல்வகுமாா் (22), ரத்தினபுரியைச் சோ்ந்த மகன் ராஜீவ் பிரபு (36), குரும்பூா் அருகே நல்லூா், பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்த வெள்ளைப்பாண்டி மகன் நவீன் செல்வகுமாா் (28) ஆகியோா் என்பதும், பள்ளி மாணவா்களுக்கு விற்பதற்காக 100 கிராம் கஞ்சாவைப் பொட்டலங்களாக வைத்திருப்பதும் தெரியவந்தது.

போலீஸாா் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்; செல்வகுமாா், ராஜீவ் பிரபுவை திருச்செந்தூா் நீதிமன்ற நீதிபதி முன் முன்னிலைப்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா். நவீன் செல்வகுமாரிடம் விசாரணை நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.