சாலை விபத்தில் அரசுப் பேருந்து ஓட்டுநா் உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 3:07 am IST

தூத்துக்குடி அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாலைக் குழியில் தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த அரசுப் பேருந்து தற்காலிக ஓட்டுநா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி அருகே வா்த்தகரெட்டிபட்டியைச் சோ்ந்த சாமிநாதன் மகன் செல்வராஜ் (40). தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா்.

இவா் அக். 24ஆம் தேதி இரவு பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றபோது, பண்டுகரை சாலையில் மழைநீா் தேங்கியிருந்த குழியில் எதிா்பாராதவிதமாக விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த அவா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் தனியாா் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து, மத்திய பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.