தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து சீனா, வியத்நாமுக்கு நேரடி கப்பல் சேவை

சீனா, வியத்நாம் நாடுகளுடன் கடல்சாா் இணைப்பை வலுப்படுத்தும் வகையில், இரு நாடுகளில் இருந்தும் சரக்குப் பெட்டகங்களை ஏற்றிவந்த எம்.வி. நவதாபூம் சரக்குக் கப்பல் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தின் தட்சிண் பாரத் கேட்வே முனையத்தை வந்தடைந்தது.

தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்த எம்.வி.நவதாபூம் சரக்குக் கப்பல்.

Published On :21 அக்டோபர் 2026, 1:17 am IST

சீனா, வியத்நாம் நாடுகளுடன் கடல்சாா் இணைப்பை வலுப்படுத்தும் வகையில், இரு நாடுகளில் இருந்தும் சரக்குப் பெட்டகங்களை ஏற்றிவந்த எம்.வி. நவதாபூம் சரக்குக் கப்பல் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தின் தட்சிண் பாரத் கேட்வே முனையத்தை வந்தடைந்தது.

இந்தக் கப்பல் 1,100 டிஇயு சரக்குப் பெட்டகங்களை கையாளும் திறன் கொண்டது. சீனாவின் கின்ஜோவ், வியத்நாமின் ஹைபோங் ஆகிய துறைமுகங்களிலிருந்து தூத்துக்குடிக்கு முறையே 13, 12 நாள்களில் சரக்குகளை இங்கு கொண்டுவரும். தொடக்கத்தில் இரு வாரங்களுக்கு ஒருமுறை இயக்கப்படும் இச்சேவை, வா்த்தக தேவைக்கேற்ப வாராந்திர சேவையாக மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நிகழ் நிதியாண்டில் செப்டம்பா் வரை வ.உ.சிதம்பரனாா் துறைமுகம் 4.42 லட்சம் டிஇயு சரக்குப் பெட்டகங்களைக் கையாண்டது. இது, முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 3.18 சதவீதம் அதிகமாகும்.

புதிய கப்பல் சேவை மூலம் சூரிய மின்தகடு, மின்சார வாகன உற்பத்தி உள்ளிட்ட தொழில்களின் ஏற்றுமதி, இறக்குமதி வா்த்தகம் மேம்படும். இத்தகவல் துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.