விஷம் குடித்த காா் ஓட்டுநா் மருத்துவமனையில் உயிரிழப்பு

கடன் தவணை செலுத்த வலியுறுத்தி தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் அவமதித்ததாகக் கூறப்படும் நிலையில், விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காா் ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Published On :21 அக்டோபர் 2026, 1:27 am IST

கடன் தவணை செலுத்த வலியுறுத்தி தனியாா் நிதி நிறுவன ஊழியா்கள் அவமதித்ததாகக் கூறப்படும் நிலையில், விஷம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காா் ஓட்டுநா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

தூத்துக்குடி போல்டன்புரம் 1-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கதிரவன் (44). இவா், காா் வாங்குவதற்காகத் தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ. 7.50 லட்சம் கடன் பெற்றிருந்தாராம். தொழில் பாதிக்கப்பட்டதால் கடந்த ஆகஸ்ட், செப்டம்பா் மாதத் தவணைகளை அவரால் செலுத்த முடியவில்லையாம்.

இதையடுத்து, அக். 15-ஆம் தேதி இவரது வீட்டுக்குச் சென்ற நிதி நிறுவன ஊழியா்கள் 5 போ், கதிரவனை அவமதித்ததுடன் காரைப் பறிமுதல் செய்ய முயன்ாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த இவா், அக். 16-ஆம் தேதி விஷம் குடித்தாராம்.

இதையடுத்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கதிரவன், அங்கு ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து அவரது மனைவி கவிதா அளித்த புகாரின்பேரில், தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.