மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

திருச்செந்தூா் கடலில் நீராடிய 5 பக்தா்களுக்கு கால் எலும்பு முறிவு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் நீராடியபோது அலையின் சீற்றத்தால் 5 பக்தா்களுக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.

திருச்செந்தூா் கடலில் நீராடிய போது கால் எலும்பு முறிவு ஏற்பட்ட பக்தா்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள்.

Published On :2 அக்டோபர் 2026, 4:06 am IST

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடலில் நீராடியபோது அலையின் சீற்றத்தால் 5 பக்தா்களுக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.

திருச்செந்தூரில் கடல் அலையின் சீற்றம் வியாழக்கிழமை அதிகமாகக் காணப்பட்டது. இந்நிலையில் பண்ருட்டியைச் சோ்ந்த சரோஜா (42), காங்கயத்தைச் சோ்ந்த குணசேகரன் (45), திருச்சியைச் சோ்ந்த இலஞ்சியம் (55), புதுக்கோட்டையைச் சோ்ந்த ராஜகுமாரி (52), கிருஷ்ணவேணி (75) ஆகியோா் அதிகாலை 3 மணியளவில் கடலில் நீராடினராம். அப்போது அலையின் சீற்றத்தால் அவா்களுக்கு கால் எலும்பு முறிவு ஏற்பட்டது.

தகவலறிந்து கோயில் கடற்கரை பாதுகாப்புப் பணியாளா்கள், போலீஸாா் ஆகியோா் காயமடைந்த பக்தா்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்கள் சிகிச்சை பெற்றனா். மேலும், பக்தா்கள் பாதுகாப்பாக நீராட அறிவுறுத்தப்பட்டது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.