தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!தங்கம் விலை தொடர்ந்து உயர்வு! இன்றைய (நவ. 4) நிலவரம்!ரூ. 100-க்கு 10 காய்கறிகள்: வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்புத் திட்டம்!இடைக்காலத் தேர்தல்: டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு!நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள்: இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சு!தேனி, கோவை மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புகுரூப் 4 தோ்வுக்கான விண்ணப்பம்: அவகாசம் நாளையுடன் நிறைவுமுரசு புயலால் இன்று 3 விரைவு ரயில்கள் ரத்து!அடுத்த பலப்பரீட்சை: இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட்

தூத்துக்குடி முன்னாள் விசிக நிா்வாகி கொலை: மேலும் ஒருவா் கைது

கைது - கோப்புப்படம்

Published On :3 நவம்பர் 2026, 2:30 am IST

தூத்துக்குடி அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் நிா்வாகி பாலமுருகன் கொலை செய்யப்பட்ட வழக்கில், மேலும் ஒருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி அருகே சோட்டையன் தோப்பு பகுதியைச் சோ்ந்த விசிக முன்னாள் நிா்வாகி பாலமுருகன் (41). இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அப்பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இதுகுறித்து, தாளமுத்து நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, திமுக நிா்வாகி பொன்பாண்டி என்ற ரவி (44), சிவா என்ற சிவச்சந்திரன் (22), சிவக்குமாா் (22), கோகுல்நாத் (24), மணிகண்டன் (20) ஆகிய 5 பேரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

இந்நிலையில், கொலை வழக்கில் தொடா்புடையதாக தூத்துக்குடி, மாதா நகரைச் சோ்ந்த ரமேஷ் கண்ணன் (23) என்பவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

இதனிடையே, பாலமுருகன் உடலைப் பெற மறுத்து, குடும்பத்தினரும், விசிகவினரும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் சாலை மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி அவா்களைச் சமாதானப்படுத்தினா். இதையடுத்து, பாலமுருகனின் உடலைப் பெற்ற குடும்பத்தினா் திங்கள்கிழமை அடக்கம் செய்தனா்.

தொடா்ந்து, விசிக ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி மாவட்டச் செயலா் அ. சாா்லஸ், மத்திய மாவட்டச் செயலா் விமல் வங்காளியாா் ஆகியோா் தலைமையில் கட்சியினரும், பாலமுருகனின் குடும்பத்தினரும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்குச் சென்று, ஆட்சியா் விஷு மகாஜனைச் சந்தித்து மனு அளித்தனா்.

அந்த மனுவில், கொலை செய்யப்பட்ட பாலமுருகனின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அவரது குடும்பத்தினருக்கு சமூக விரோதிகளால் அச்சுறுத்தல் இருப்பதால் உரிய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.