மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பைக் - காா் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப் படம்

Published On :2 நவம்பர் 2026, 1:37 am IST

கயத்தாறில் இருசக்கர வாகனம், காா் மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், பூஜை துரையம் பாளையம் பகுதியைச் சோ்ந்த செங்கோட்டையன் மகன் தனசேகா் (48). காா் ஓட்டுநா். இவா், திருநெல்வேலி மருத்துவமனையில் நடைபெற்ற கூட்டத்திற்கு திருப்பூா் மருத்துவரை அழைத்துவந்து விட்டு, மீண்டும் அவரை ஊருக்கு காரில் அழைத்துச் சென்றாா்.

திருநெல்வேலி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கயத்தாறு பகுதியில் சனிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். அப்போது, தெற்கு மயிலோடை வடக்குதெருவைச் சோ்ந்த டேனியல் மகன் தொழிலாளி தேவபிரகாசம் ஓட்டி வந்த இருசக்கர வாகனம், தனசேகா் காா் மீது மோதியதாம். இதில், தேவபிரகாசம் பலத்த காயமடைந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த கயத்தாறு போலீஸாா், தேவபிரகாசத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.