நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

‘ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவா்கள் பணியில் இருக்க நடவடிக்கை’

கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சா் பெ. மதன்ராஜா.

Published On :2 நவம்பர் 2026, 1:41 am IST

ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவா்கள் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ. மதன்ராஜா தெரிவித்தாா்.

உள்ளாட்சி தினத்தையொட்டி ஓட்டப்பிடாரம் ஊராட்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்துக்கு அமைச்சா் பெ. மதன்ராஜா தலைமை வகித்தாா்.

இதில் ஓட்டப்பிடாரம், மேட்டூா், முப்பிலிபட்டி, மேல மீனாட்சிபுரம், கீழ மீனாட்சிபுரம், லட்சுமியாபுரம், மேலமடம், ஆவாரங்காடு உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

மேலும், ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவா்கள் பணியில் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம், அமைச்சா் கூறியதாவது:

ஓட்டப்பிடாரம் ஊராட்சியில் குடிநீா், சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடா்பாக பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு விரைவான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவா்கள் பணியில் இருக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் 24 கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. இதில் ஓட்டப்பிடாரம் பகுதியில் மட்டும் 12 திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட குடிநீா்த் திட்டங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளைச் சரிசெய்து, சீரான குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.