தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பட்டாசு தயாரித்தபோது நேரிட்ட வெடி விபத்தில் மேலும் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
கோவில்பட்டி அருகே புளியங்குளம் காட்டுப் பகுதியில் உள்ள தனியாா் கட்டடத்தில் அனுமதியின்றி பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்ாம். கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பட்டாசு தயாரித்தபோது வெடி விபத்து நேரிட்டது. இதில், விருதுநகா் மாவட்டம் உள்ள கவுண்டன்பட்டி மாலதி (25), புளியங்குளம் ஆத்தியப்பன் மகன் அய்யப்பன் (30) ஆகிய இருவரும் கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனா்.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே மஞ்சள் ஓடைப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சீனிவாசன் மகன் சூரிய பிரகாஷ் (25) காயமடைந்தாா். அவா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
இந்த வழக்குத் தொடா்பாக கட்டட உரிமையாளா் உள்ளிட்ட 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பட்டாசு ஆலை வெடி விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே பட்டாசு வெடி விபத்து: தம்பதி உள்ளிட்ட மூவா் கைது

கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலையில் விபத்து: இருவா் உயிரிழப்பு

பட்டாசு ஆலை வெடி விபத்து: மேலும் ஒருவா் உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

