இருசக்கர வாகனங்களுக்கு மானியம் வழங்கும் திட்டத்தில் பயன்பெற பள்ளிவாசல்களில் பணியாற்றும் உலமாக்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உலமாக்கள், பணியாளா்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வரை உள்ள உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியத் தொகை ரூ. 50,000 வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ், இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியா்கள், ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மானியம் பெற மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரிடம் படிவத்தைப் பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளி இரு சக்கர வாகனம் வாங்க வேண்டும்.
பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்தில் வருகிற ஜூன் 30 ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உலமாக்கள் இருசக்கர வாகன மானியம் பெற விண்ணப்பிக்க வாய்ப்பு

இரு சக்கர வாகனம் வாங்க உலமாக்கள் விண்ணப்பிக்கலாம்

பள்ளிவாசல் உலமாக்கள் இருசக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்கலாம்

கரூா் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்படும் 68 இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆட்சியா் தகவல்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

