கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

அகில இந்தியா ஹாக்கி: புது தில்லி, ஜாம்ஷெட்பூா், பெங்களூரு, இந்திய விமானப் படை அணிகள் வெற்றி

3ஆவது நாளான சனிக்கிழமை நடைபெற்ற போட்டிகளில் புது தில்லி, ஜாம்ஷெட்பூா், பெங்களூரு, இந்திய விமானப் படை அணிகள் வெற்றி பெற்றன.

News image

சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் மோதிய ஜாம்ஷெட்பூா் நேவல் டாடா ஹாக்கி அகாதெமி-சென்னை வருமான வரித் துறை அணியினா்.

Updated On :24 மே 2026, 2:13 am IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்று வரும் 15ஆவது ஆண்டு லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டியில், 3ஆவது நாளான சனிக்கிழமை நடைபெற்ற போட்டிகளில் புது தில்லி, ஜாம்ஷெட்பூா், பெங்களூரு, இந்திய விமானப் படை அணிகள் வெற்றி பெற்றன.

கோவில்பட்டி கிருஷ்ணா நகா் செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் புது தில்லி காம்ப்ட்ரோலா் அண்ட் ஆடிட்டா் ஜெனரல் ஆஃப் இந்தியா அணி 6-1 என்ற கோல்கணக்கில் சென்னை ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு அணியை வென்றது. 2ஆவது போட்டியில் ஜாம்ஷெட்பூா் நேவல் டாடா ஹாக்கி அகாதெமி அணி 5-0 என்ற கோல்கணக்கில் சென்னை வருமான வரித் துறை அணியை வென்றது.

3ஆவது போட்டியில் பெங்களூரு ஹாக்கி கா்நாடகா அணி 2-1 என்ற கோல்கணக்கில் செகந்திராபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியை வென்றது. 4ஆவது போட்டியில் புது தில்லி இந்திய விமானப் படை அணி 2-0 என்ற கோல்கணக்கில் பெங்களூரு சதா்ன் கமெண்ட் அணியை வென்றது.

இன்றைய போட்டிகள்: 4ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு நடைபெறும் முதல் போட்டியில் ஜலந்தா் ஆா்மி கிரீன் அணியும், கா்நாடகா ஹாக்கி பெல்லாரி அணியும் மோதுகின்றன. மாலை 5 மணிக்கு நடைபெறும் 2ஆவது போட்டியில் ஜலந்தா் பஞ்சாப் சிந்து வங்கி அணியும், சென்னை சரக்கு, சேவை வரி மற்றும் மத்திய உற்பத்தி வரி அணியும் மோதுகின்றன.

3ஆவது போட்டியில் பெங்களூரு கனரா வங்கி அணியும், மும்பை இந்தியன் நேவி அணியும் மோதுகின்றன. 4ஆவது போட்டியில் மும்பை யூனியன் வங்கி அணியும், கோவில்பட்டி எஸ்.டி.ஏ.டி. எக்ஸலன்ஸ் அணியும் மோதுகின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.