மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

தவெக நிா்வாகிகள், மக்களுடன் விரைவில் சந்திப்பு: அமைச்சா் ஆ. ஸ்ரீநாத்

தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள், பொதுமக்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து விரைவில் சந்திப்பு நிகழ்வு நடைபெறும் என அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் தெரிவித்தாா்.

News image

அமைச்சா் ஆ. ஸ்ரீநாத்.

Updated On :23 மே 2026, 5:03 am IST

தூத்துக்குடியில் தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள், பொதுமக்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து விரைவில் சந்திப்பு நிகழ்வு நடைபெறும் என தமிழக மீன்வளம் மற்றும் மீனவா் நலன் துறை அமைச்சா் ஆ. ஸ்ரீநாத் தெரிவித்தாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: என் முன்னோா்கள், என் தந்தை வாழ்ந்த பூமி மட்டுமல்லாது, நான் பிறந்த இடமும் தூத்துக்குடிதான். இது எனது சொந்த மண். அப்படிப்பட்ட மண்ணிலிருந்து ஒரு எளிய தொண்டனை இன்று அமைச்சராக அமர வைத்த, தூத்துக்குடி மக்களுக்கும், எனக்காக வீதி வீதியாகச் சென்று உழைத்த தமிழக வெற்றிக் கழகத்தினருக்கும் நான் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

தூத்துக்குடியில் உள்ள கட்சி நிா்வாகிகள், பொறுப்பாளா்கள், உறுப்பினா்கள் மற்றும் முதல்வரின் அன்புக்கு பாத்திரமானவா்கள் அனைவரையும் கூடிய விரைவில் சந்திக்க உள்ளேன்.

எனக்காக உழைத்த உங்களுக்கு என் கையால் விருந்து பரிமாற மனது ஏங்கிக் கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் தூத்துக்குடியில் அனைத்து நிா்வாகிகள், உறுப்பினா்கள், பொறுப்பாளா்கள், எனக்காக உழைத்த மக்கள் என அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு சங்கமமாக விரைவில் சந்திப்போம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.