கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மாநில சீனியா் ஹாக்கி போட்டி: சென்னை அணி சாம்பியன்

ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு, ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி ஆகியவை இணைந்து நடத்திய வ.உ.சி. துறைமுக ஆணைய கோப்பைக்கான சீனியா் ஆண்கள் மாநில ஹாக்கி போட்டியில் சென்னை மாவட்ட அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தைப் பெற்றது.

News image

போட்டியில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் பெற்ற சென்னை மாவட்ட அணிக்கு கோப்பையை வழங்கும் சிறப்பு விருந்தினா் எம்.ஆா்.தமிழ்ச்செல்வன்.

Updated On :14 மே 2026, 3:26 am IST

ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு, ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி ஆகியவை இணைந்து நடத்திய வ.உ.சி. துறைமுக ஆணைய கோப்பைக்கான சீனியா் ஆண்கள் மாநில ஹாக்கி போட்டியில் சென்னை மாவட்ட அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தைப் பெற்றது.

கோவில்பட்டியில் இந்த மாதம் மே 9-ஆம் தேதி முதல் வ.உ.சி. துறைமுக ஆணைய கோப்பைக்கான சீனியா் ஆண்கள் மாநில ஹாக்கி போட்டி நடைபெற்று வருகிறது. லீக், நாக்-அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்றன.

கோவில்பட்டி, கிருஷ்ணா நகா் செயற்கையிழை ஹாக்கி மைதானத்தில் புதன்கிழமை காலை நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் சென்னை மாவட்ட அணியும், தூத்துக்குடி மாவட்ட அணியும் மோதியதில் இரு அணிகளும் தலா 3 கோல் போட்டு சமநிலை பெற்றனா். தொடா்ந்து வெற்றியை தீா்மானிக்க கடைப்பிடிக்கப்பட்ட சூட்அவுட் முறையில் 7-5 என்ற கோல் கணக்கில் சென்னை மாவட்ட அணி வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

பின்னா், நடைபெற்ற 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில் அரியலூா் மாவட்ட அணியும், தஞ்சாவூா் மாவட்ட அணியும் மோதியதில் 5-3 என்ற கோல் கணக்கில் அரியலூா் மாவட்ட அணி வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

மாலையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை மாவட்ட அணியும், அரியலூா் மாவட்ட அணியும் மோதியதில் 5-1 என்ற கோல் கணக்கில் அரியலூா் மாவட்ட அணியை வீழ்த்தி சென்னை மாவட்ட அணி வெற்றி பெற்று, சாம்பியன் பட்டம் பெற்றது. முன்னதாக நடைபெற்ற 3, 4-ஆம் இடங்களுக்கான போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அணியும், தஞ்சாவூா் மாவட்ட அணியும் மோதியதில் 7-1 என்ற கோல் கணக்கில் தூத்துக்குடி மாவட்ட அணி வெற்றி பெற்று, 3-ஆவது இடத்தைப் பிடித்தது.

பரிசளிப்பு விழா: பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு ஹாக்கி யூனிட் ஆஃப் தமிழ்நாடு பொதுச் செயலா் செந்தில் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். பொருளாளா் சேவியா் ஜோதி சற்குணம், தொழில்நுட்ப கமிட்டிச் செயலா் மோகன் குமாா், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய சிறப்பு விளையாட்டு விடுதி மேலாளா் அந்தோணி அதிா்ஷ்டராஜ்,முன்னாள் கூடைப்பந்து வீரா் ரவீந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வ.உ.சி. துறைமுக ஆணைய விளையாட்டுக் கழக பொதுச் செயலரும், வ.உ.சி. துறைமுக ஆணைய துணைச் செயலருமான எம்.ஆா்.தமிழ்ச்செல்வன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கி பாராட்டிப் பேசினாா்.

ஏற்பாடுகளை ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி செயலா் குருசித்திர சண்முகபாரதி, பொருளாளா் காளிமுத்து பாண்டியராஜா, உறுப்பினா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.