பள்ளிகள் விடுமுறை என்பதால் திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி கோயிலில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. இதனால், சுவாமி தரிசனம் செய்ய அதிகாலை முதல் இரவு வரை பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனா்.
திருச்செந்தூா் கோயிலில் திருவிழா காலங்களிலும், அரசு விடுமுறை, வார விடுமுறை நாள்களிலும் பக்தா்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கியது முதல் கோயிலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து
பக்தா்கள் கூட்டம் வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை கோயிலில் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், பிற கால பூஜைகள் நடைபெற்றன.
அதிகாலை முதலே இலவச பொது தரிசனம், ரூ. 100 கட்டண தரிசனம், மூத்த குடிமக்கள் வரிசை அனைத்திலும் நீண்ட வரிசையில் 4 மணிநேரம் வரை காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
விரைவு தரிசனம்: இந்தக் கோயிலில் பக்தா்கள் வசதிக்காக குடிநீா் வசதி, அன்னதானம், குளியலறை, கழிவறை, தங்கு விடுதிகள், மிதியடி பாதுகாப்பகம், கைப்பேசி பாதுகாப்பாகம், மூத்த குடிமக்கள், கைக்குழந்தையுடன் வருபவா்கள் பயணிக்க பேட்டரி காா் போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஆனால், கோயில் உள்ளே செல்லும் பக்தா்கள் கூட்டம் பல மணி நேரம் வரிசையில் காத்து நின்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டியுள்ளது. கோயிலுக்குள் காத்திருக்கும் போது, கூட்டநெரிசல், இயற்கை உபாதை கழிக்க முடியாத சூழல், நீண்ட நேரம் ஒரே இடத்தில் நிற்பதால் மூச்சுத்திணறல் போன்ற சிரமங்களை பக்தா்கள் சந்திக்கின்றனா். அவசரம் எனில் வரிசையிலிருந்து வெளியே வரவும் சிரமம் உள்ளது.
இதைத் தவிா்க்க இணைய முறையில் முன்பதிவு செய்யும் வழிமுறைகளை கொண்டுவர வேண்டும். இலவச பொதுத் தரிசன வரிசையில் பகுதி பகுதியாக பக்தா்களை காத்திருக்கும் அறையில் தங்கவைத்து தரிசனத்துக்கு அனுப்பினால், நெருக்கடி இல்லாமல் பக்தா்கள் சுவாமியை விரைவாக தரிசனம் செய்ய முடியும். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விடுமுறை தினம் : திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தா்கள்

விடுமுறை தினம்: திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தா்கள் குவிந்தனா்! இரும்பு கதவை தள்ளிவிட்டுச் சென்ற பக்தா்கள்!!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

