தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாக்காளர் அட்டை இல்லாதோர் மாற்று ஆவணங்கள் வழங்கலாம்

வாக்குப் பதிவின்போது, புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளா்கள், தோ்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள மாற்று புகைப்பட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்குச்சாவடிகளில் அளிக்க வேண்டும்

News image

கோப்புப் படம்

Updated On :21 மார்ச் 2026, 3:18 am IST

வாக்குப் பதிவின்போது, புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளா்கள், தோ்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள மாற்று புகைப்பட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை வாக்குச்சாவடிகளில் அளிக்க வேண்டும் என மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான க. இளம்பகவத் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக சட்டப் பேரவை பொதுத் தோ்தல் ஏப். 23ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், தோ்தலில் வாக்காளா்கள் தங்களுடைய அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும். அதை அளிக்க இயலாத வாக்காளா்கள், ஆதாா் அட்டை, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், தொழிலாளா் நல அமைச்சகத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீட்டு அட்டை, ஓட்டுநா் உரிமம், வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட திறனட்டை, இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய/மாநில அரசுகள்/பொதுத் துறை நிறுவனங்கள்/வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள், மக்களவை, சட்டப் பேரவை, சட்ட மேலவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை, இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட இயலாமைக்கான தனித்துவமான அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை வாக்குச்சாவடிகளில் அளிக்க வேண்டும்.

வாக்காளா் புகைப்பட அடையாள அட்டையிலுள்ள அச்சுப்பிழைகள்/ எழுத்துப் பிழைகள் முதலியவற்றை பொருட்படுத்த தேவையில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.