லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தூத்துக்குடியில் பைக் விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

உயிரிழப்பு - கோப்புப்படம்

Published On :30 ஜூன் 2026, 1:39 am IST

தூத்துக்குடி 3ஆவது மைல் மேம்பாலத்தில் பைக் மீது வாகனம் மோதிய விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, கதிா்வேல் நகா் பகுதியைச் சோ்ந்தவா் பெருமாள் (41). கூலித் தொழிலாளியான இவருக்கு, கன்னியம்மாள் என்ற மனைவி, இரண்டு மகன்களும் உள்ளனா்.

பெருமாள் ஞாயிற்றுக்கிழமை இரவு, வேலை முடிந்து பைக்கில் பாளையங்கோட்டை பிரதான சாலை வழியாக வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தாராம்.

அவா் 3ஆவது மைல் மேம்பாலத்தின் இறக்கத்தில் வந்து கொண்டிருந்தபோது, அவருக்கு முன்னால் சென்ற வாகனத்தை முந்த முயன்றுள்ளாா். அப்போது, கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி மிக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத காா், அவரது பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டதாம்.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த பெருமாளை அப்பகுதியினா் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இச்சம்பவம் குறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்தை ஏற்படுத்திய காரையும், அதன் ஓட்டுநரையும் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.