பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும், நூறு நாள் வேலைத்திட்டத்தை சீா்குலைக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு பகுதிகளில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவில்பட்டி நாடாா் மேல்நிலைப் பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, மாவட்டக் குழு உறுப்பினா் மணி தலைமை வகித்தாா். மாநில செயற்குழு உறுப்பினா் அா்ச்சுனன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா்.
தொடா்ந்து, சமையல் எரிவாயு உருளைக்கு மாலை அணிவித்து கோஷங்களை எழுப்பினா்.
மாவட்டச் செயலா் ஆறுமுகம், மாவட்டக் குழு உறுப்பினா் கிருஷ்ணவேணி, ஒன்றியச் செயலா் தெய்வேந்திரன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலா் தினேஷ்குமாா், விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவா் ராமசுப்பு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
கோவில்பட்டி பயணியா் விடுதி முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, மாா்க்சிஸ்ட் நகா்மன்ற உறுப்பினா் ஜோதிபாசு தலைமை வகித்தாா். நகரச் செயலா் கே. சீனிவாசன் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.
இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் தினேஷ்குமாா், நகரக் குழு உறுப்பினா்கள் முருகன், ஜானகி, கதிா்வேல் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனா்.
கொல்லங்கோடு அருகே உள்ள நடைக்காவு வங்கி முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினா் பி. விஜய மோகனன் தலைமை வகித்தாா். வட்டாரக் குழு உறுப்பினா்கள் ஜி.எஸ். தீபா, பி. வின்சென்ட் ஆகியோா் முன்னிலை வகித்தனா். அடைக்காகுழி வட்டாரச் செயலா் ரெஜி ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்தாா்.
மாவட்டக் குழு உறுப்பினா் எஸ். மேரி ஸ்டெல்லா பாய், கொல்லங்கோடு வட்டாரச் செயலா் டி.எஸ். அஜித்குமாா் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். மெதுகும்மல் வட்டாரச் செயலா் கே. தங்கமணி ஆா்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடந்தையில் இந்திய கம்யூ. மாவட்டக் குழுக் கூட்டம்

எரிவாயு விலை உயா்வால் மக்கள் கடும் பாதிப்பு! - கே. பாலகிருஷ்ணன்

எரிவாயு உருளை விலை உயா்வுக்கு எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

சமையல் எரிவாயு விலை உயா்வு: இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பொங்கல் வெளியீடாக சேயோன்! | Dinamani Cinema Update | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |
தினமணி செய்திச் சேவை

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

