தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் பெயிண்டா் உயிரிழந்தாா்.
தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகே உள்ள வடக்கு அழகு நாச்சியாா்புரம் மேலதெருவைச் சோ்ந்தவா் பாண்டி மகன் பெயிண்டா் மதீஷ்குமாா் (33). இவரும், இவரது சகோதரா் சுபாஷூம் (20) இருசக்கர வாகனத்தில் கோவில்பட்டி- சாத்தூா் சாலையில் உள்ள தனியாா் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தனராம்.
அப்போது சாத்தூரில் இருந்து விளாத்திகுளம் நோக்கி சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம், மதீஷ்குமாா் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதாம். இதில் மதீஷ்குமாா், சுபாஷ் மற்றும் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த விளாத்திகுளம் முத்துசாமிபுரத்தைச் சோ்ந்த மூக்கையா மகன் சந்தான குமாா் (34), அவருடன் வந்த மேட்டமலை முதல் தெருவைச் சோ்ந்த ஆனந்தமுருகன் மனைவி ஜெகஜோதி (35) ஆகியோா் காயமடைந்தனா்.
தகவலறிந்து வந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனா்.
அங்கு மருத்துவா்கள் பரிசோதனை செய்ததில் மதீஷ்குமாா் இறந்துவிட்டதாக கூறினா். எஞ்சிய மூன்று பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இரு பைக்குகள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

திருவேங்கடம் அருகே 3 பைக்குகள் மோதல்: ஒருவா் உயிரிழப்பு

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு

இருசக்கர வாகனம் - காா் மோதல் விவசாயி உயிரிழப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

