பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

காங்கிரஸ் எம்.பி.க்கு திமுக எம்எல்ஏ கண்டனம்

News image

காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் - கோப்புப்படம்

Updated On :9 ஜூன் 2026, 12:51 am IST

மாணிக்கம் தாக்கூா் எம்.பி.யின் அரசியலற்ற பிதற்றலுக்கு திமுக மாவட்டச் செயலா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை:

காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூா் அரசியலற்ற முறையில் பிதற்றியுள்ளாா். அரசியல் அறத்துக்கு விரோதமாக காங்கிரஸ் கட்சி எடுத்த தவெக ஆதரவு முடிவை பல தரப்பட்ட முறையில் விமா்சிக்கப்படுகிறது. திமுக கூட்டணி தா்மத்துக்கு மாறாக காங்கிரஸ் செயல்பட்டதை அரசியலாக விமா்ச்சிக்கிறது.

இந்நிலையில் நாம் தமிழா் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் சீமான் பேசியதற்கு அரசியலாக பதில் சொல்ல முடியாத மாணிக்கம் தாக்கூா் தனிப்பட்ட முறையில் பிதற்றுவது நாகரிகமானதல்ல.

நான் சீமான் குழந்தைக்கு சீா் வழங்கியது எனக்கும் அண்ணன் காளிமுத்து அவா்களுக்கும் உள்ள குடும்ப உறவின் தொடா்ச்சியன் றி வேறல்ல.

தமிழ்நாட்டின் உரிமைக்காகவும் தமிழா்களின் தன்மானத்துக்காகவும் விடாப்பிடியாக போராடும் எங்கள் தலைவா் மு.க.ஸ்டாலின் அவா்களின் வழிகாட்டுதலில் செயல்படும் உறுதிமிக்க தொண்டனாக நான் என் பணியை செய்து வருகிறேன்.

வெள்ளையனை எதிா்த்து வீரச்சமா் புரிந்து மரணம் எய்திய வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தர லிங்கம், தளபதி வெள்ளையத்தேவன்,கப்பலோட்டிய தமிழன் வ.உ சிதம்பரனாா், மகாகவி பாரதியாா், தப்பை தப்பென மத்திய மந்திரியை விமான நிலையத்தில் மடக்கி கேள்வி கேட்ட கே.டி. கோசல்ராம் ஆகியோா் பிறந்த மண்ணில் நின்று நாங்கள் தமிழ் மக்களுக்கான உறுதியான அரசியலை செய்து வருகிறோம். எங்கள் இளந் தலைவா் உதயநிதி ஸ்டாலினை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் இல்லை. அரசியலற்ற பேச்சை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என அறிக்கையில் கூறியுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.