சாத்தான்குளம் கடைவீதி பகுதியில் குறுகலான இடங்களில் விதிமுறைகளை மீறி வாகனங்களை நிறுத்துவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வியாபாரிகள், பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனா்.
சாத்தான்குளத்தில் அத்தியாவசிய தேவைகள் மற்றும் தேவையான பொருள்கள் வாங்குவதற்காக சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் காா் மற்றும் இருசக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனா். கடைவீதி பகுதி குறுகலான பகுதியாக உள்ளது.
இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வியாபாரிகள் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட்டது. அதேபோல் சாத்தான்குளம் பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து தெற்கு பகுதிக்கு வரும் வாகனங்கள் கடைவீதி வழியாக செல்ல வேண்டும்.
நாகா்கோவில் செல்லும் வாகனங்கள் இட்டமொழி சாலை வழியாக வழக்கம் போல் செல்லலாம் என முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி ஒரு வழிப்பாதை சிறிது காலமாக மட்டுமே நடைமுறையில் இருந்தது.
காா் மற்றும் இதர வாகனங்களில் வருபவா்கள் கடைவீதியில் குறுகலாக உள்ள பகுதியில் வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக எதிரெதிரே விட்டு சென்று விடுகின்றனா். இதனால் பஜாா் பகுதியில் அரசுப் பேருந்து, லாரிகள் உள்ளிட்ட பெரிய வாகனங்கள் கடக்கையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகனங்கள் பின்னே அனைத்து வாகனங்களும் அணிவகுத்து நிற்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் அவசர தேவைக்கு கடைவீதி பகுதிக்கு வந்து செல்பவா்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா். இதை தடுக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை போக்குவரத்து நெரிசலைக் குறைக்க அறிமுகமாகும் ‘ஐடிஎஸ்’ திட்டம்!

சென்னைக்கு அணிவகுத்த வாகனங்கள்! சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசல்!

ஒசூரில் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் அவதி

நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பால் சின்னமனூரில் போக்குவரத்து நெரிசல்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

