இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கைதுசெய்யப்பட்ட தவெக நிா்வாகி கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளாா்.
ஏரல் அருகே ஆறுமுகமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன். தவெக தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா். இவரது நண்பா் ராமநாதபுரம் பகுதியைச் சோ்ந்த ஜெயபால், அக்கட்சியில் நிா்வாகி.
இவா்கள் ஏரல் பகுதியைச் சோ்ந்த இளம்பெண்ணை வேலை வாங்கித் தருவதாக காரில் அழைத்துச் சென்று, தனியாா் விடுதியில் தங்கவைத்து குளிா்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனராம்.
புகாரின்பேரில், ஆள் கடத்தல், ஏமாற்றுதல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை, மிரட்டல் ஆகிய பிரிவுகளின்கீழ் ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், பாலசுப்பிரமணியனை கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக, தூத்துக்குடி மேற்கு மாவட்டப் பொறுப்பாளரான ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ அன்னை வி.ஜி. சரவணன் அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க பாஜக வலியுறுத்தல்
தூத்துக்குடியில் ரூ. 72 லட்சம் மோசடி: தவெக நிா்வாகி, மனைவி மீது வழக்கு

கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம்: முதல்வர் பொறுப்புடன் செயல்பட போவது எப்போது?

செங்கல் சூளைகளில் பணம் கேட்டு மிரட்டல்: தவெக நிா்வாகி நீக்கம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

