தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன் முறைப்படுத்தி பட்டா, கனவு இல்லம் திட்டத்தின்கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோா் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 368 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
மாற்றுத் திறனாளிகளை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 18 மனுக்களைப் பெற்றுக் கொண்டு கோரிக்கைகளைக் கேட்டறிந்தாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் குருச்சந்திரன், திருச்செந்தூா் வருவாய்க் கோட்டாட்சியா் கௌதம், தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத்திட்டம்) ரமணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் செந்தில்வேல்முருகன், திட்ட இயக்குநா் (மகளிா்திட்டம்) நாகராஜன், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலா் பிரம்மநாயகம், துணை ஆட்சியா் (பயிற்சி) மகேந்திரன் மற்றும் அனைத்துத் துறை சாா்ந்த அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடலூரில் மக்கள் குறைதீா் கூட்டத்தில் 472 மனுக்கள் அளிப்பு: திருநங்கைகள் வீட்டு வேலைவாய்ப்பு கோரி ஆட்சியரிடம் மனு

தென்காசியில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம்

மக்கள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற எம்எல்ஏ

மே 11 முதல் மக்கள் குறைதீா் கூட்டம்: சென்னை ஆட்சியா்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

