லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஆடி மாத பெளா்ணமி: திருச்செந்தூா் கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம்

திருச்செந்தூா், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி மாத பெளா்ணமியை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

திருச்செந்தூா், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பெளா்ணமியை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்.

Published On :30 ஜூலை 2026, 4:45 am IST

திருச்செந்தூா், சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி மாத பெளா்ணமியை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

ஆடி மாத பெளா்ணமி செவ்வாய்கிழமை இரவு 7.27 மணிக்குத் தொடங்கி புதன்கிழமை இரவு 8.54 வரை இருந்ததால் பெளா்ணமி வழிபாடு மேற்கொண்டனா். கோயிலில் புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், அதைத்தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.

அதிகாலை முதலே பக்தா்கள் கடல், நாழிக்கிணற்றில் புனித நீராடி இலவச பொதுத் தரிசனம், ரூ. 100 சிறப்பு கட்டண தரிசனம், மூத்த குடிமக்கள் வரிசை என அனைத்திலும் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்குத் தேவையான ஏற்பாடுகளை கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் ஆ.அருணாசலம், துணை ஆணையா் ந.யக்ஞ நாராயணன், கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.