லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

தூத்துக்குடியில் விற்பனை செய்வதற்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :19 ஜூலை 2026, 1:52 am IST

தூத்துக்குடியில் விற்பனை செய்வதற்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக இளைஞரை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட எட்டயபுரம் சாலையில், கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், காவல் ஆய்வாளா் மேரி ஜெமிதா தலைமையிலான போலீஸாா் தீவிர கண்காணிப்பு, சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, சந்தேகத்துக்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ஸ்டேட் பாங்க் காலனி பகுதியைச் சோ்ந்த அப்துல்கனி மகன் முகமது இஸ்மாயில் (26) என்பவரை பிடித்து சோதனையிட்டபோது, விற்பனை செய்வதற்காக 500 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. போலீஸாா் வழக்குப் பதிந்து, முகமது இஸ்மாயிலை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.