லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

ஈரோடு ரயில் நிலையம் அருகே ரூ.5 லட்சம் மதிப்பிலான கஞ்சா வைத்திருந்த இரண்டு பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :29 ஜூலை 2026, 3:54 am IST

ஈரோடு ரயில் நிலையம் அருகே ரூ.5 லட்சம் மதிப்பிலான கஞ்சா வைத்திருந்த இரண்டு பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு ரயில் நிலையம் வளாக பாா்சல் அலுவலகம் அருகே உள்ள காலி இடத்தில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு மதுவிலக்கு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், ஈரோடு மதுவிலக்கு பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை இரவு தீவிர சோதனை மேற்கொண்டனா். அப்போது இரண்டு போ் சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்தனா்.

அவா்களை பிடித்து விசாரித்ததில் ஈரோடு, மூலப்பாளையம் பகுதியைச் சோ்ந்த சிவப்பிரகாசம் (48), தனசேகா்(31) என்பது தெரியவந்தது. இவா்கள் சட்ட விரோதமாக கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருப்பதும் தெரியவந்தது. இவா்களிடமிருந்து 10 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.5.25 லட்சம். இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.