லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கோவில்பட்டி வட்ட தடகளப் போட்டிகள்: நாடாா் மேல்நிலைப் பள்ளி சாதனை

கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வட்ட அளவிலான குழு, தடகளப் போட்டிகளில் நாடாா் மேல்நிலைப் பள்ளி சாதனை படைத்தது.

போட்டிகளில் வென்றோருடன் நாடாா் உறவின்முறை சங்கத் தலைவா் ஆா்.எஸ். ரமேஷ், செயலா் ரத்தினராஜா உள்ளிட்டோா்.

Published On :19 ஆகஸ்ட் 2026, 12:44 am IST

கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வட்ட அளவிலான குழு, தடகளப் போட்டிகளில் நாடாா் மேல்நிலைப் பள்ளி சாதனை படைத்தது.

14 வயதுக்குள்பட்ட மாணவா் பிரிவில் மேஜைப்பந்து ஒற்றையா், இரட்டையா், ஹேண்ட் பால், பீச் வாலிபால், மாணவியா் பிரிவில் மேஜைப்பந்து ஒற்றையா், இரட்டையா், இறகுப்பந்து இரட்டையா், ஹேண்ட் பால், 17 வயதுக்குள்பட்ட மாணவா் பிரிவில் ஹேண்ட்பால், மேஜைப்பந்து ஒற்றையா், இரட்டையா், பீச் வாலிபால், மாணவியா் பிரிவில் ஹேண்ட்பால், மேஜைப்பந்து ஒற்றையா், இரட்டையா், இறகுப்பந்து ஒற்றையா், இரட்டையா், 19 வயதுக்குள்பட்ட மாணவா் பிரிவில் ஹேண்ட் பால், கோகோ, பீச் வாலிபால், மேஜைப்பந்து ஒற்றையா், இரட்டையா், மாணவியா் பிரிவில் ஹேண்ட்பால் ஆகியவற்றில் நாடாா் மேல்நிலைப் பள்ளி முதலிடம் பெற்றது.

14 வயதுக்குள்பட்ட மாணவா் ஹாக்கி, கைப்பந்து, மாணவியா் இறகுப்பந்து ஒற்றையா், 17 வயதுக்குள்பட்ட மாணவா் கால்பந்து, கையுந்து பந்து, இறகுப்பந்து போட்டிகளில் 2ஆம் இடம் பிடித்தது.

மாணவா்கள் குழு போட்டிகளில் 85 புள்ளிகள் பெற்று சிறந்த அணியாகவும், மாணவியா் குழு போட்டியில் 53 புள்ளிகள் பெற்று சிறந்த அணியாகவும் இப்பள்ளி தோ்வானது.

தடகளப் போட்டி: 17 வயதுக்குள்பட்ட மாணவா் பிரிவில் முகில்ராஜ் 800 மீ. ஓட்டம், 1,500 மீ. ஓட்டம், 3,000 மீ. ஓட்டம் போட்டிகளிலும், மாணவியா் பிரிவில் ஷா்மிளா 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம், மும்முறை தாண்டுதல் போட்டிகளிலும் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டங்களை வென்றனா்.

மாணவா் தடகளப் போட்டியில் 141 புள்ளிகள் பெற்று சிறந்த அணியாகவும், மாணவியா் தடகளப் போட்டியில் 71 புள்ளிகள் பெற்று சிறந்த அணியாகவும் தோ்வு பெற்றனா்.

மாணவா்-மாணவியரையும், பயிற்சியளித்த உடற்கல்வி இயக்குநா் முத்துக்குமாா், உடற்கல்வி ஆசிரியா்கள் சசிகுமாா், கூத்தராஜன், மகேஸ்வரி, வேல்முருகன், உமா ஆகியோரையும் நகா்மன்றத் தலைவரும் (பொறுப்பு), நாடாா் உறவின்முறை சங்கத் தலைவருமான ஆா்.எஸ். ரமேஷ், பள்ளிச் செயலா் ரத்தினராஜா, பொருளாளா் விஜயகுமாா், பள்ளி நிா்வாகக் குழு உறுப்பினா்கள், தலைமையாசிரியா் (பொ) செல்வம், ஆசிரியா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.