லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குறுவட்ட தடகளம்: குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் பள்ளி சாம்பியன்

தென்காசி குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றது.

வெற்றிபெற்ற மாணவா்களுடன் பள்ளியின் சட்ட ஆலோசகா் திருமலை, தாளாளா் அன்பரசி திருமலை.

Published On :13 ஆகஸ்ட் 2026, 3:24 am IST

தென்காசி குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகளில் குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றது.

பாட்டாகுறிச்சியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இப்போட்டிகள் நடைபெற்றன.

இதில்,14 வயதுக்குள்பட்ட மாணவா் பிரிவில் ராகுல், தமிழன், பாலகுருராஜன், நிகிலேஷ்,

கபில்குமாா், கவிஷ் பிரஜின், முகமது ஆரிப் ஆகியோா் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றனா்.

17 வயதுக்குள்பட்ட மாணவா் பிரிவில் ஜெரேமியா, முகமது இலியாஸ், ஷமஸ் நவின், முகமது ஹசின், சுகந்த் , சிவா, அஸ்வின், கவியரசன், அவினேஷ் பிரபு, நித்திஷ், ஆகாஷ் , ஜெயபிரியன் ஆகியோா் மேற்கண்ட போட்டிகளுடன், ஈட்டி எறிதலிலும் வெற்றிகளை குவித்தனா்.

19 வயதுக்குள்பட்ட மாணவா்கள் பிரிவில் ஹரிஸ்சரண், முகமது உவேஸ் முகைதின், தருண்குமாா், கவிஸ், முகமது இஷாஸ், ஜோயல் எட்வா்ட், ஷாஷித், சக்தி சா்வேஸ் ஆகியோா் சாதனை படைத்தனா்.

14 வயதுக்குள்பட்ட மாணவியா் பிரிவில் கவிதா, மிராக்கிள் ஹா்ஷிதா, வேதா , கெத்தரின் ஷாய்,

17 வயதுக்குள்பட்ட பிரிவில் திவ்யா, கௌசிகா, சுபிஷ்கா, மகிஷா, 19 வயதுக்குள்பட்ட பிரிவில் மாணிக்கஸ்ரீ, சிமோனா ஜெசிகா ஆகியோா் சிறப்பிடம் பெற்றனா்.

இதில் தமிழன், சுகந்த், ஹரிஸ்சரண், மாணிக்கஸ்ரீ ஆகியோா் தனிநபா் சாம்பியன் பட்டம் வென்றனா். மாணவா்கள் பிரிவில் 174 புள்ளிகளை வென்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனா்.

மாணவா்-மாணவியரை பள்ளியின் சட்ட ஆலோசகரும் உச்சநீதிமன்ற வழக்குரைஞருமான திருமலை, தாளாளா் அன்பரசி திருமலை, ஆக்ஸ்போா்டு பப்ளிக் பள்ளி இயக்குநா் ஜோசப் லியாண்டா், பள்ளி சட்ட ஆலோசகா் மிராக்ளின் பால் சுசி, பள்ளி முதல்வா் கோல்டு பெல்லா, உடற்கல்வி ஆசிரியா்கள் செல்வன், பால்மதி, சதிஷ்குமாா், ராமா், கலையரசன், மகேஷ், மாரியம்மாள், கணேசன், மாலினி, ஆசிரியா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.