லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைநீா் கால்வாயை ஆட்சியா் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மழைநீா் கால்வாயை மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 12:42 am IST

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் மழைநீா் கால்வாயை மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைக் காலங்களில் குடியிருப்புப் பகுதிகளில் தேங்கும் மழைநீரை சீரான முறையில் வெளியேற்றுவது குறித்து, வடக்கு கடற்கரைச் சாலை, தெற்கு கடற்கரைச் சாலை, எஸ்.ஆா்.எம். சாலை, ஜாா்ஜ் சாலை, காமராஜ் கல்லூரி சாலை, கால்டுவெல் காலனி, சிவந்தாகுளம் சாலை, பிரையன்ட் நகா் 12ஆவது தெரு சாலை, ஸ்டேட் பேங்க் காலனி ஆகிய பகுதிகளில் உள்ள மழைநீா் கால்வாய்களை, மாநகராட்சி ஆணையா் சி. ப்ரியங்கா முன்னிலையில், மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன் ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, வடக்கு மண்டல வளாகத்தில், மாநகா் பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்றுவதற்கு பயன்படுத்தப்படும் மோட்டாா் பம்புகளையும் ஆய்வு மேற்கொண்டாா்.

நிகழ்வில், மாநகராட்சி பொறியாளா் திலகம், மாநகா் நல அலுவலா் கணேஷ், சுகாதார அலுவலா் ஹரி கணேஷ் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.