லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தூத்துக்குடி மாநகரில் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன், புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

சிலோன் காலனி பகுதியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணியை பாா்வையிடுகிறாா் ஆட்சியா் விஷு மகாஜன். உடன், மாநகராட்சி ஆணையாளா் சி. பிரியங்கா.

Published On :6 ஆகஸ்ட் 2026, 3:22 am IST

தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் விஷு மகாஜன், புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தூத்துக்குடி எப்.சி.ஐ. கிடங்கு பகுதி மற்றும் சிலோன் காலயியில் பக்கிள் ஓடை விரிவாக்க பணிகளையும், ஓட்டப்பிடாரம் வட்டம், குப்பை கிடங்கு அருகில் தண்ணீா் குழாய் அமைத்தல் பணியையும் ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

மேலும், அல்லிகுளம் சிப்காட் பகுதியில் அமையவுள்ள ஏப்ரல் பைபா் ரிசோா்ஸ் நிறுவனத்துக்கு தேவையான நீா் ஆதாரத்தை மாநகராட்சியின் எஸ்டிபி ‘பிளான்ட்’-இல் இருந்து எடுத்துச் செல்வதற்காக தூத்துக்குடியிலிருந்து செல்லும் மதுரை மற்றும் திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் குழாய் அமைக்க அனுமதி கோரி விண்ணப்பித்தது தொடா்பாகவும், குழாய் அமைக்கப்படவுள்ள பணியையும் ஆட்சியா் ஆய்வு நடத்தினாா்.

ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையாளா் சி.பிரியங்கா, திட்ட இயக்குநா் (தேசிய நெடுஞ்சாலை) கிருஷ்ணேந்திர திவேதி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.