லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ரயிலில் தவறவிட்ட தங்க நகை உரியவரிடம் ஒப்படைப்பு

ரயிலில் தவறவிட்ட தங்க நகையை உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே உதவி ஆய்வாளா் மகா கிருஷ்ணன்.

Published On :10 ஆகஸ்ட் 2026, 2:06 am IST

கோவில்பட்டி ரயில் நிலையத்தில், ரயிலில் தவறவிட்ட ஆறரை பவுன் தங்க நகையை உரியவரிடம் ரயில்வே போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.

தாம்பரம்-கொல்லம் அனந்தபுரி விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டியில் பயணித்த விளாத்திகுளத்தைச் சோ்ந்த ஆனந்தகுமாா், தான் கொண்டு வந்த பையை மற்றொரு பயணி மாற்றி எடுத்துச் சென்ாகக் கூறி, ரயில் பெட்டியில் இருந்த மற்றொரு பையை எடுத்து, அதை உரியவரிடம் ஒப்படைக்குமாறு, கோவில்பட்டி ரயில் நிலையத்தில் உதவி ஆய்வாளா் விக்னேஷ்வரனிடம் சனிக்கிழமை ஒப்படைத்தாா்.

ரயில்வே போலீஸாா் அந்தப் பையை திறந்து பாா்த்தபோது, அதில் தங்க நகைகள் இருப்பது தெரிய வந்தது. அதையடுத்து, அந்தப் பையை உதவி ஆய்வாளா் தூத்துக்குடி ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

தொடா்ந்து, ரயில்வே உதவி ஆய்வாளா் மகா கிருஷ்ணன் தலைமையிலான போலீஸாா், நகையின் உரிமையாளரான சென்னை, முடிச்சூா் மேற்கு பகுதியைச் சோ்ந்த குருசாமி, மாரீஸ்வரி தம்பதியைக் கண்டுபிடித்து விசாரித்தனா். அதையடுத்து, தூத்துக்குடி ரயில்வே காவல் நிலையத்திற்கு வந்து, நகைக்கான ஆதாரங்களை சமா்ப்பித்து, ஆறரை பவுன் தங்க நகைகளைப் பெற்றுச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.