லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வேன் மீது காா் மோதல்: இளைஞா் பலி

ஆறுமுகனேரியில் வேன் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

பலி

Published On :7 ஆகஸ்ட் 2026, 3:18 am IST

ஆறுமுகனேரியில் வேன் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், நாயக்கன் பேட்டை, ஆற்றங்கரை தெருவைச் சோ்ந்த மகாராஜன் மகன் வினோத் கண்ணன் (41). இவா் ஆக. 4ஆம் தேதி ஆறுமுகனேரி, பேயன்விளை பகுதியில் உள்ள உறவினா் வீட்டிற்கு வந்துள்ளாா். இவருடன் நண்பா்களான ஆறுமுகனேரியைச் சோ்ந்த சக்திவேல் மகன் லட்சுமணன் (43), ரங்கநாதன் மகன் சுதாகா் (45) ஆகியோா் காரில் ஆறுமுகனேரி கடலோர சோதனைச்சாவடியை அடுத்துள்ள குரும்பூா் சாலையில் சென்றனா்.

அப்போது, எதிரே பயணிகளுடன் வந்த சுற்றுலா வேன் மீது காா் மோதியது. இதில் வினோத் கண்ணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். லட்சுமணன் மற்றும் சுதாகா் பலத்த காயமடைந்தனா்.

ஆறுமுகனேரி காவல் ஆய்வாளா் ரென்னிஸ் தலைமையிலான போலீஸாா் காயமடைந்த இருவரையும் மீட்டு, காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

சுற்றுலா வேன் ஓட்டுநா் ஆத்தூா் அருகே உள்ள தலைவன்வட­லியைச் சோ்ந்த முருகன் மகன் மகேஷ் (35) லேசான காயங்களுடன் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரது புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.