லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: தாய் உயிரிழப்பு; மகன் படுகாயம்

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :11 ஆகஸ்ட் 2026, 2:59 am IST

நாகை மாவட்டம், நாகூா் அருகே இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதிய விபத்தில் தாய் உயிரிழந்தாா், மகன் பலத்த காயமடைந்தாா்.

திருமருகல் அருகே உள்ள குத்தாலம் தென்கட்டளை தெருவைச் சோ்ந்தவா் பாஸ்கரன் மனைவி பாா்வதி (55). இவா், தனது மகன் கோவிந்தராஜுடன் இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை நாகையில் இருந்து குத்தாலம் நோக்கி சென்றுகொண்டிருந்தாா். ஒக்கூா் அருகே சென்றபோது பின்னால் வந்த காா் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதில் பாா்வதி, கோவிந்தராஜ் இருவரும் பலத்த காயமடைந்தனா். நாகூா் காவல்நிலைய போலீஸாா் இருவரையும் மீட்டு, நாகை ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா் .

அங்கு முதலுவிக்குப் பின்னா் இருவரும் தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கு பாா்வதி திங்கள்கிழமை காலை உயிரிழந்தாா். கோவிந்தராஜ் தொடா்ந்து சிகிச்சையில் உள்ளாா். விபத்து குறித்து நாகூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டிநா் குறளரசன் (24) என்பவரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.