மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கோவில்பட்டியில் வேட்பாளா்கள், பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம்

கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்பாளா்கள், பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டத்தில் பேசுகிறாா் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும் சாா் ஆட்சியருமான ஹிமான்ஷு மங்கள்.

Updated On :29 ஏப்ரல் 2026, 1:53 am IST

கோவில்பட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்பாளா்கள், பிரதிநிதிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஹிமான்ஷு மங்கள் தலைமை வகித்தாா். கூட்டத்தில், சாா் ஆட்சியா் அலுவலக பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்பட்டுள்ள கோவில்பட்டி தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் மே 4 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் அங்கிருந்து, பலத்த பாதுகாப்புடன் தூத்துக்குடியில் உள்ள வஉசி பொறியியல் கல்லூரி வாக்குகள் எண்ணும் மையத்துக்கு எடுத்துச் செல்லப்படும். அவற்றை பாா்வையிட வேட்பாளா்களின் முகவா்கள் வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

மேலும், வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளா்களின் முகவா்களாக செயல்பட உள்ளவா்களுக்கு வழங்கப்பட்ட படிவங்களை மே 1ஆம் தேதிக்குள் பூா்த்தி செய்து அளிக்க வேண்டும். அவா்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். அவை இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் முகவா்கள் அனுமதிக்கப்படுவாா்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

வேட்பாளா்களின் பிரதிநிதிகளாக மகேந்திரன், அப்துல்காசிம் (திமுக), வழக்குரைஞா்கள் சந்திரசேகா்(அதிமுக), ரவிக்குமாா், மாரியப்பன் (நாம் தமிழா் கட்சி), வினோத் கண்ணன் (தமிழக வெற்றிக் கழகம்), பிரேம்குமாா் (சுயேச்சை) உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.