ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பெருங்குளம் செங்கோல் ஆதீன குருமுதல்வா் ஸ்ரீசத்தியஞான தரிசினிகள் குருபூஜை

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகிலுள்ள பெருங்குளம் திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீன குருமுதல்வா் ஸ்ரீசத்தியஞான தரிசினிகள் குருபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

குருமுதல்வருக்கு வழிபாடு நடத்தி வைக்கிறாா் செங்கோல் ஆதீனம் 103- ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சாா்ய சுவாமிகள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 4:02 am IST

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகிலுள்ள பெருங்குளம் திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீன குருமுதல்வா் ஸ்ரீசத்தியஞான தரிசினிகள் குருபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலை நீடாமங்கலம் சுவாமிநாதன் குழுவினரின் மங்கள இசை, அண்ணாமலை பல்கலைக்கழகம் இசைத்துறை உதவி பேராசிரியா் முருகசுந்தா் ஓதுவாரின் திருமுறை விண்ணப்பம், ஆதீன ஆன்மாா்த்த மூா்த்தி அழகிய திருச்சிற்றம்பலமுடையாா் வழிபாடு, பெருங்குளம் சித்தா் தபோவனத்தில் உள்ள குருமூா்த்தி திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு ஆகியன நடைபெற்றன.

ஆதீன திருமடத்தில் உள்ள ஞானப்பிரகாசா் அரங்கத்தில் பெருங்குளம் திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் 103 - ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்திய ஞான பரமாச்சாா்ய சுவாமிகளால் ஆதீன குருமுதல்வருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.

ஆன்மிகம், சமுதாயப் பணிகளில் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு விருது, பொற்கிழியும், கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவிகளுக்கு உதவித்தொகையும் ஆதீனகா்த்தரால் வழங்கப்பட்டது. எட்டயபுரம் அடியவா்க்கு அடியவா் திருக்குழாம் சாா்பாக தச்சநல்லூா் அழகிய சொக்கநாத பிள்ளை இயற்றிய சங்கர சதாசிவ மாலை மூலமும் உரையும் என்ற நூல் வெளியிடப்பட்டது.

மதியம் மாகேஸ்வர பூஜை, மாலை பெருங்குளம் திருவழுதீஸ்வரா் ஆலயத்தில் ஆதீனகா்த்தா் பெருவழிபாடற்றல், ஆதீன குருமுதல்வா் சிவிகையில் பட்டணப் பிரவேசம் ஆகியன நடைபெற்றன. இரவு குருமகா சந்நிதானம் சிவஞான கொலுக்காட்சியுடன் குருபூஜை நிறைவு பெற்றது.

திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீன தென்மண்டல கட்டளை விசாரணை தம்பிரான் திருஞானசம்பந்த தம்பிரான் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை குருமகா சந்நிதானம் அருளாணையின் வண்ணம் காறுபாறு அழகிய திருச்சிற்றம்பலமுடைய தம்பிரான் செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.