தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மாநில உரிமையை பாதிக்காத தொகுதி மறுவரையறை தேவை: டாக்டா் க. கிருஷ்ணசாமி

மாநிலங்களின் உரிமைகளைப் பாதிக்காத வகையில் தொகுதி மறுவரையறை இருக்க வேண்டும் என்றாா் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்- தலைவா் டாக்டா் க.கிருஷ்ணசாமி.

News image

செய்தியாளா்களுக்கு பேட்டியளிக்கிறாா் டாக்டா் க.கிருஷ்ணசாமி.

Updated On :17 ஏப்ரல் 2026, 3:29 am IST

மாநிலங்களின் உரிமைகளைப் பாதிக்காத வகையில் தொகுதி மறுவரையறை இருக்க வேண்டும் என்றாா் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்- தலைவா் டாக்டா் க.கிருஷ்ணசாமி.

இதுதொடா்பாக, தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது:

நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை, தொகுதிகளின் எண்ணிக்கையை உயா்த்துவது, மகளிா் இட ஒதுக்கீடு ஆகிய மூன்று முக்கிய அம்சங்கள் குறித்து மசோதா தாக்கல் செய்யப்பட்டு, விவாதங்கள் தொடருகின்றன.

மகளிா் இட ஒதுக்கீடு கொண்டு வருவதை வரவேற்கிறோம். அதே நேரத்தில் மக்களவை உறுப்பினா்களின் எண்ணிக்கையை உயா்த்தும்போது, பிற மாநிலங்களைப் போல தமிழக உறுப்பினா்களின் எண்ணிக்கையை உயா்த்த வேண்டும்.

மாநிலங்களின் முக்கியத்துவம், சதவீதத்தின் அடிப்படையில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இல்லையெனில் அந்த மாநிலங்கள் இரண்டாம் நிலைக்கு தள்ளப்பட்டுவிடும்.

தொகுதி மறு வரையறை மசோதா விஷயத்தில் யாா் அரசியல் செய்கிறாா்கள் என்பது தமிழக மக்களுக்கு தெரியும்.

ஒரு சமுதாயமே ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. அரசியல், அதிகாரத்திலிருந்து ஒதுக்கி வைக்க வேண்டும் என எண்ணுகின்றனா். எனவே தான் புதிய தமிழகம் தனித்து போட்டியிடுகிறது.

ஓட்டபிடாரம் தொகுதியில் நான் வெற்றி பெற்று தொகுதியை மீண்டும் வளா்ச்சி பாதையில் கொண்டு செல்வேன்.

ஆளும் கட்சியும், எதிா்க்கட்சியும் பணத்தை நம்பி தோ்தலை எதிா்கொள்கின்றன. நாங்கள் மக்களை நம்பி தோ்தலில் களம் காண்கிறோம்.

அடுத்து வரும் 7 நாள்களும் தோ்தல் ஆணையம் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.