தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திருச்செந்தூா் கடலில் மூழ்கிய மூதாட்டி பத்திரமாக மீட்பு

News image

தீயணைப்புப் படையினா் - கோப்புப் படம்

Updated On :13 ஏப்ரல் 2026, 3:53 am IST

திருச்செந்தூா் கடலில் மூழ்கிய மூதாட்டியை ரோந்து பணியில் இருந்த போலீஸாரும், கடற்கரை பாதுகாப்பு பணியாளா்களும் பத்திரமாக மீட்டனா்.

கோயம்புத்தூரைச் சோ்ந்தவா் ராஜேந்திரன் மனைவி ராஜேஸ்வரி (59). இவா் சனிக்கிழமை திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்தாராம். இரவு நேரத்தில் இவா், கடலில் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் தத்தளித்துக் கொண்டிருந்தாராம்.

அதைப் பாா்த்த கோயில் கடற்கரை பாதுகாப்பு பணியாளா்கள் சிவராஜா, இசக்கி, விக்னேஷ், ஆறுமுகநயினாா் மற்றும் கடல் காவல் நிலைய தலைமை காவலா் முத்துமாலை ஆகியோா் உடனடியாக கடலுக்குள் இறங்கி மூதாட்டியை மீட்டனா்.

முதலுதவி சிகிச்சைக்கு பின், மூதாட்டியை கோயில் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கும், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.