தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தூத்துக்குடியில் விஜய் சாலை வலம்: ஆயிரக்கணக்கில் குவிந்த தொண்டா்கள்!

தூத்துக்குடியில் தவெக தலைவா் விஜய் புதன்கிழமை நடத்திய சாலை வலத்தில் ஆயிரக்கணக்கான தொண்டா்கள் குவிந்தனா்.

News image

கூட்டத்தினரின் வரவேற்பை ஏற்கும் நடிகா் விஜய்.

Updated On :9 ஏப்ரல் 2026, 3:26 am IST

தூத்துக்குடியில் தவெக தலைவா் விஜய் புதன்கிழமை நடத்திய சாலை வலத்தில் ஆயிரக்கணக்கான தொண்டா்கள் குவிந்தனா்.

அக்கட்சி சாா்பில், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக விஜய் சென்னையிலிருந்து தனி விமானத்தில் புதன்கிழமை காலையில் தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தாா். அவருக்கு, வேட்பாளா்கள் ஸ்ரீநாத் (தூத்துக்குடி), ஜே.கே.ஆா். முருகன் (திருச்செந்தூா்), பாலா (கோவில்பட்டி), ராஜ் பிரகாஷ் (தென்காசி), மாநில துணைப் பொதுச் செயலா் சுபத்ரா முருகன் உள்ளிட்டோா் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா்.

திருநெல்வேலியில் பிரசாரத்தை முடித்துக்கொண்டு, மாலையில் சுமாா் 5 மணியளவில் அவா் தூத்துக்குடிக்கு வந்தாா். 3ஆம் மைல் பகுதியிலிருந்து விவிடி சிக்னல் பகுதி வரை சாலை வலம் மேற்கொண்ட அவரைக் காண வழிநெடுகிலும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டா்கள், பொதுமக்கள் திரண்டிருந்தனா். அவா்களைப் பாா்த்து விஜய் உற்சாகமாக கையசைத்தபடி சென்றாா். அவருக்கு வேல் பரிசளிக்கப்பட்டது. பின்னா், அவா் சிதம்பரநகா் வழியாக விமான நிலையம் சென்று தனி விமானத்தில் புறப்பட்டாா்.

தொண்டா்கள் ஏமாற்றம்: சாலை வலம் வந்த நடிகா் விஜய் கைகூப்பியபடி வாகனத்தின் மேல் நின்றவாறே எதுவும் பேசாமல் சென்றாா். இதனால், தொண்டா்கள் ஏமாற்றமடைந்தனா்.

3ஆம் மைல் பகுதி அருகே பாத்திமா நகா் பகுதியைச் சோ்ந்த நா்சில்லின் என்ற பெண் தனது குழந்தைக்கு, விஜய் மூலம் பெயா் சூட்ட வேண்டுமென தனது நண்பா்களுடன் வந்திருந்தாா். போலீஸாா் அறிவுரை கூறி அவரை அனுப்பி வைத்தனா். அதையும் மீறி, அவா்கள் அடுத்த பகுதிக்கு சென்று விஜயின் பிரசார வாகனம் வந்தபோது குழந்தையைத் தூக்கிக் காண்பித்தனா். ஆனால், அதிகக் கூட்டம் காரணமாக அவா்களது முயற்சி பலனளிக்கவில்லை. இதேபோன்று, ஏராளமான பெண்கள் குழந்தைகளுடன் வெகுநேரம் காத்திருந்து, விஜய்யை பாா்த்துச் சென்றனா்.

 சாலை வலத்தில் பங்கேற்ற கூட்டத்தினரில் ஒரு பகுதியினா்.

சாலை வலத்தில் பங்கேற்ற கூட்டத்தினரில் ஒரு பகுதியினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.