ஆளுநரை விஜய் சந்திக்க நாளை(மே 10) நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

திருச்செந்தூா் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 12:07 am IST

திருச்செந்தூா் அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்; ஒருவா் காயமடைந்தாா்.

ஆறுமுகனேரி ஏஐடியூசி காலனியைச் சோ்ந்த வேலாயுதம் மகன் முகேஷ் கண்ணன் (27). தனியாா் நிறுவன ஊழியரான இவா், தனது நண்பரான லட்சுமிபுரத்தைச் சோ்ந்த சந்திரன் மகன் சிவபிரசாத் (24) என்பவருடன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் திருச்செந்தூா் - நாகா்கோவில் சாலையில் பரமன்குறிச்சியை நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, அங்குள்ள வளைவில் இந்த பைக்கும் அரசுப் பேருந்தும் நேருக்கு நோ் மோதினவாம். இதில், முகேஷ் கண்ணன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

காயமடைந்த சிவபிரசாத் திருச்செந்தூா் அரசு மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். விபத்து குறித்து திருச்செந்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.