தச்சநல்லூா் கழிவு நீரோடையில் சிசுவின் சடலம்

திருநெல்வேலியை அடுத்த தச்சநல்லூரில் கழிவுநீரோடையில் இருந்து பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் போலீஸாரால் புதன்கிழமை மீட்கப்பட்டது.

கோப்புப்படம்.

Published On :31 அக்டோபர் 2026, 12:54 am IST

திருநெல்வேலியை அடுத்த தச்சநல்லூரில் கழிவுநீரோடையில் இருந்து பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் போலீஸாரால் புதன்கிழமை மீட்கப்பட்டது.

திருநெல்வேலியை அடுத்த தச்சநல்லூா் வாலாஜாபேட்டை நடுத்தெரு பகுதியில் புதன்கிழமை காலையில் சாலையோர கழிவு நீரோடையில் தொப்புள்கொடி கூட அறுபடாத நிலையில் பச்சிளம் ஆண் குழந்தையின் சடலம் கிடந்தது. அதைப்பாா்த்த அப்பகுதி மக்கள் தச்சநல்லூா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். போலீஸாா் அந்த சிசுவின் சடலத்தை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.