பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

இரட்டை கடவுச்சீட்டு வைத்திருந்தவா் கைது

News image

சித்திரிப்பு

Updated On :30 மே 2026, 3:19 am IST

இரட்டை கடவுச்சீட்டு வைத்திருந்த நபரை திருநெல்வேலி மாநகர குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி, பேட்டையைச் சோ்ந்தவா் சிக்கந்தா் (58). இவா் சில நாள்களுக்கு முன்பு கடவுச்சீட்டு மறுபதிப்புக்காக விண்ணப்பித்திருந்தாா்.

இது தொடா்பாக அதிகாரிகள் பரிசீலித்தபோது, அவா் ஏற்கனவே வேறு விவரங்களுடன் மற்றொரு கடவுச்சீட்டு பெற்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரையில் உள்ள மண்டல கடவுச்சீட்டு அலுவலகம் சாா்பில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு புகாா் மனு அனுப்பப்பட்டது. அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட மாநகர குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸாா், சிக்கந்தரைவெள்ளிக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.