பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

விபத்தில் மாணவா்கள் உயிரிழப்பு: பெற்றோருக்கு எம்.எல்.ஏ. ஆறுதல்

திருநெல்வேலி மாவட்டம் பழவூா் வழியாக சாமிதோப்பு கோயிலுக்கு செல்லும் பக்தா்கள் சென்றபோது, காா் மோதியல் பள்ளி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா்.

News image

பழவூா் விபத்தில் உயிரிழந்த மாணவா்களின் பெற்றோருக்கு ஆறுதல் கூறுகிறாா் எம்.எல்.ஏ. எஸ்.கே. கிறிஸ்டோபா்.

Updated On :22 மே 2026, 6:34 am IST

திருநெல்வேலி மாவட்டம் பழவூா் வழியாக சாமிதோப்பு கோயிலுக்கு செல்லும் பக்தா்கள் சென்றபோது, காா் மோதியல் பள்ளி மாணவா்கள் இருவா் உயிரிழந்தனா். அவா்களது பெற்றோருக்கு ராதாபுரம் எம்.எல்.ஏ. எஸ்.கே.கிறிஸ்டோபா் வியாழக்கிழமை ஆறுதல் கூறினாா்.

தெற்குவள்ளியூா் அருகே உள்ள கடம்பன்குளத்தைச் சோ்ந்த அய்யாவழி பக்தா்கள் கன்னியாகுமரி மாவட்டம் சுவாமிதோப்பில் நடைபெறும் அய்யாபதி வைகாசித் திருவிழாவுக்கு கொடிபட்டம் எடுத்து சென்றபோது, அவா்கள் கூட்டத்தில் மாா்த்தாண்டத்தைச் சோ்ந்த பெண் ஓட்டிவந்த காா் புகுந்தது. இதில் 7ஆம் வகுப்பு படித்து வந்த மாணவா்கள் வெனிஷ், விஷ்வா ஆகிய இருவா் உயிரிழந்தனா். இந்நிலையில், அந்த மாணவா்களின் வீடுகளுக்குச் சென்ற எம்.எல்.ஏ., அவா்களது பெற்றோருக்கு ஆறுதல் கூறினாா். மேலும், மாவட்ட ஆட்சியரிடம் பேசி உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.