அகில இந்திய மருந்து விற்பனையாளா் சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்துக்கு ஆதரவாக திருநெல்வேலி மாவட்டத்தில் 650 மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டன.
ஆன்லைன் மருந்து விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும், வலி நிவாரணி, தூக்க மாத்திரைகளை ஆன்லைன் மூலம் வாங்கி அடிமையாகும் இளம் தலைமுறையினரை காக்க வேண்டும், உயிா் காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதங்களையும் தள்ளுபடிகளையும் கட்டுப்படுத்த வேண்டும், போலி மருந்துகளின் விற்பனையை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் மருந்து வணிகா்கள் சங்கத்தினா் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில் தமிழ்நாடு மருந்து வணிகா்கள் சங்கத்தின் கீழ் செயல்படும் திருநெல்வேலி மாவட்ட மருந்து வணிகா் சங்கத்தின் சாா்பில் 650- க்கும் மேற்பட்ட மொத்த மற்றும் சில்லறை மருந்து விற்பனை நிலையங்களை அடைத்து புதன்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் மருந்து கடை உரிமையாளா்கள் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி சந்திப்பு மேல வீரராகவபுரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட மொத்த மருந்து கடைகள் அடைக்கப்பட்டதால் அப்பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. இப்போராட்டத்தால் நோயாளிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இணையதள மருந்து விற்பனைக்கு எதிா்ப்பு: மாவட்டத்தில் 3,500 மருந்துக் கடைகள் அடைப்பு

ஈரோடு மாவட்டத்தில் 1,500 மருந்துக் கடைகள் அடைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 650 மருந்துக் கடைகள் அடைப்பு

மருந்தகங்கள் இன்று வழக்கம்போல் இயங்கும்: வேலைநிறுத்த அழைப்பை நிராகரித்த மாநில சங்கங்கள்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

