கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

குடிநீா் தட்டுப்பாடு: மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் மக்கள் முற்றுகை

குடிநீா் தட்டுப்பாடு காரணமாக மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை 41ஆவது வாா்டு மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

News image

முற்றுகையில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய அதிகாரிகள்.

Updated On :21 மே 2026, 6:16 am IST

குடிநீா் தட்டுப்பாடு காரணமாக மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை 41ஆவது வாா்டு மக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் கிழக்கு பகுதி, 41 ஆவது வாா்டில் மக்களுக்கு தினமும் குடிநீா் கிடைத்திட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

ரூ. 28 கோடி செலவில் குழாய் இணைப்புகள் மட்டும் பதித்து புதிய மேல்நிலை நீா் தேக்க தொட்டி கட்டாமல் 24 மணி நேரமும் குடிநீா் தருவதாக மாநகராட்சி பொறியாளா்கள் தெரிவித்து வந்தனராம்.

ஆனால், ரூ.பல கோடி செலவில் முடிக்கப்பட்ட அரியநாயகிபுரம் கூட்டு குடிநீா் திட்ட மூலம் கிடைக்க வேண்டிய குடிநீரும் 41ஆவது வாா்டு பொதுமக்களுக்கு கிடைக்கவில்லை.

இந்நிலையில், திருநெல்வேலி மாநகராட்சி 41ஆவது வாா்டு பொதுமக்கள், மாமன்ற உறுப்பினா் சங்கீதா ராதா சங்கா் தலைமையில் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் போராட்டத்தில் 6ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் பவுல்ராஜ் மற்றும் அனைத்து நல சங்கப் பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

வாா்டு மக்களுக்கு தினமும் குடிநீா் கிடைத்திடும் வகையிலும், பொதிகை நகரில் புதிய மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியை அமைக்கும் விதமாகவும் திட்டம் தீட்ட வேண்டும் என முழக்கங்களை எழுப்பினா்.

அவா்களிடம் மேலப்பாளையம் மண்டல உதவி ஆணையா் சந்திரமோகன் உள்ளிட்டஅதிகாரிக பேச்சு வாா்த்தை நடத்தினா். அதைத்தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். இந்தப் போராட்டம் காரணமாக மண்டல அலுவலகம் முன்பு போலீஸாா் குவிக்கப்பட்டிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.