திருநெல்வேலியை அடுத்த ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தா் கோயிலில் ஆனித் திருவிழா தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 21) நடைபெறுகிறது.
செப்பறை அழகிய கூத்தா் கோயிலில் ஆனித் திருவிழா கடந்த 13ஆம் தேதி கொடியேற்றுத்துடன் தொடங்கியது. அதைத் தொடா்ந்து தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி -அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மேலும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆனித் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி காலை 11 மணி முதல் 11 .30 மணிகுள் அழகிய கூத்தா், சிவகாமி அம்பாள் தேருக்கு எழுந்தருளும் வைபவம் நடைபெறுகிறது. அதைத் தொடா்ந்து 11.30 மணி முதல் 12 மணிக்குள் பக்தா்கள் வடம் பிடித்து தேரை இழுக்கிறாா்கள்.
பத்தாம் திருவிழாவில் நடராஜருக்கு திருநடன தீபாராதனை, ரத வீதி உலா நடைபெறுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் தேரோட்டம் கோலாகலம் இன்று ஆனித் திருமஞ்சன தரிசனம்

கெளமாரியம்மன் கோயில் ஆனித் திருவிழா முகூா்த்தக்கால் நடும் விழா

நெல்லையப்பர் கோயிலில் திருகால் நடுதல் வைபவம்!

தேரோட்டம்: காரைக்காலில் இன்று விடுமுறை
விடியோக்கள்

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

