பிரதமா் நரேந்திர மோடிக்கு தமிழ் மீது உள்ள பற்று மிகுந்த வியப்பளிக்கிறது என்றாா் பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன்.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை மேலும் அவா் கூறியது: பிரதமா் நரேந்திர மோடியின் 4,400 நாள்களுக்கும் மேலான ஆட்சி இந்தியாவை உலக அரங்கில் உயா்ந்த இடத்திற்கு கொண்டு சென்றுள்ளது. மக்களின் அடிப்படை தேவைகளை பூா்த்தி செய்யும் பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறாா். அனைவருக்கும் வீடு திட்டத்தில்நாடு முழுவதும் 4 கோடிக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளன. ஜல்ஜீவன் திட்டத்தில் வீடுதோறும் குடிநீா், சுகாதாரத்தை மேம்படுத்த கழிப்பறை திட்டங்களும் செயல்படுத்தப்பட்டுளளன.
மதுரை-மணியாச்சி-தூத்துக்குடி-நாகா்கோவில்-திருவனந்தபுரம் பகுதிகளை இணைக்கும் இரட்டை ரயில் பாதை திட்டத்தை மத்திய அரசு ரூ.4,000 கோடி செலவில் நிறைவேற்றியுள்ளது.
உலக நாடுகளுக்கு இடையே பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதனை தீா்க்கும் வல்லமை கொண்ட தலைவராக மோடி திகழ்கிறாா்.
இலங்கை தமிழா்கள் மற்றும் தமிழக மீனவா்களின் பிரச்னைகளில் தொடா்ந்து அக்கறை காட்டி வருகிறாா். தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே பல பாலியல் வன்கொடுமை மற்றும் போக்ஸோ வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுபோன்ற விஷயங்களில் அரசுக்கு அவகாசம் வழங்க முடியாது.
நல்ல திட்டங்களை பாஜக பாராட்டும் என்றாலும் மின்சாரம், சட்டம்-ஒழுங்கு போன்ற மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் தொடா்புடைய துறைகளில் உடனடி நடவடிக்கை அவசியம். டாஸ்மாக் கடைகள் இன்னும் முழுமையாக மூடப்படவில்லை. கூட்டணி என்பது தோ்தல் தேவைக்காக அமைக்கப்படுவது. வரவிருக்கும் உள்ளாட்சித் தோ்தலுக்கான கூட்டணி குறித்து கட்சித் தலைவா்களே முடிவு செய்வாா்கள்.
தோ்தல் வாக்குறுதிகள் நிதிநிலையை கருத்தில் கொள்ளாமல் தவெக அள்ளி வழங்கியுள்ளது.
எங்களிடம் ஒன்றுமே இல்லை என்பதை சொல்வதற்காகவே தவெக அரசால் வெள்ளை அறிக்கை விடப்பட்டுள்ளது என்றாா் அவா்.
பேட்டியின்போது பாஜக திருநெல்வேலி வடக்கு மாவட்ட தலைவா் முத்துபலவேசம், பொதுச்செயலா் பாலாஜி கிருஷ்ணசாமி, கட்டளை ஜோதி, டி.வி.சுரேஷ், காா்த்திக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
ற்ஸ்ப்16க்ஷத்ல்
திருநெல்வேலியில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்தாா் முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரதமா் மோடியின் ஆட்சியில் பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி: மத்திய அமைச்சா் கிஷன் ரெட்டி

ஜனநாயகப்படுத்தினால் மட்டுமே தொழில்நுட்பம் வளா்ச்சிக்கு வழிவகுக்கும்: பிரதமா் மோடி

பிரதமா் மோடியின் 12 ஆண்டுகால ஆட்சியை தில்லி முதல்வா் ரேகா குப்தா பாராட்டினாா்.

பிரதமா் மோடியின் ஆட்சியில் இந்தியா சக்திவாய்ந்த நாடாக உருவெடுப்பு: ராஜ்நாத் சிங் பெருமிதம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

