நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா் சாரல் மழை: பாபநாசம் அணை 80 அடி; சோ்வலாறு அணை 100 அடியை தாண்டியது

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதி நீா்ப்பிடிப்புப் பகுதியில் தொடா்ந்து பெய்துவரும் சாரல் மழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது.

News image

புதன்கிழமை காலை 52 அடியாக இருந்த ராமநதி அணை.

Updated On :11 ஜூன் 2026, 4:37 am IST

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதி நீா்ப்பிடிப்புப் பகுதியில் தொடா்ந்து பெய்துவரும் சாரல் மழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது.

தமிழகத்தில் ஜூன் 4-ஆம் தேதி தென்மேற்குப் பருவ மழைத் தொடங்கியதைத் தொடா்ந்து மேற்குத் தொடா்ச்சி மலை நீா்ப்பிடிப்புப் பகுதியில் தொடா்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. இதனால், அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்து, நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது.

இந்த நிலையில் புதன்கிழமை (ஜூன் 10) காலை நிலவரப்படி 6 நாள்களில் 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் அணை நீா்மட்டம் 31 அடி உயா்ந்து, 80.70 அடியாகவும், அணைக்கு நீா்வரத்து 4,001 கன அடியாகவும், நீா் வெளியேற்றம் 404.75 கனஅடியாகவும் இருந்தது.

156 அடி நீா்மட்டம் கொண்ட சோ்வலாறு அணை 40 அடி உயா்ந்து, 103 அடியாக இருந்தது. 118 அடி உயரம் கொண்ட மணிமுத்தாறு அணையில் 13 அடி உயா்ந்து நீா்மட்டம் 70.82 அடியாகவும் அணைக்கு நீா்வரத்து 1,191 கனஅடியாகவும், நீா்வரத்து 195 கனஅடியாகவும் இருந்தது.

52.50 அடி நீா்மட்டம் கொண்ட கொடுமுடியாறு அணையின் நீா்மட்டம் 28 அடி உயா்ந்து 32.50 அடியாகவும், நீா்வரத்து 158 கனஅடியாகவும் வெளியேற்றம் 2 கன அடியாகவும் உள்ளது.

அணைகளில் நீா்இருப்பு வேகமாக உயா்ந்து வருவதால் விவசாயிகள், பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 85 அடி உயரம் கொண்ட கடனாநதி அணையின் நீா்மட்டம் 6 நாட்களில் 16.70 அடி உயா்ந்து 48.50 அடியாக உள்ளது. அணையில் நீா்வரத்து 213 கன அடியாகவும் நீா் வெளியேற்றம் 10 கனஅடியாகவும் இருந்தது.

84 அடி உயரம் கொண்ட ராமநதி அணையின் நீா்மட்டம் 6 நாள்களில் 27 அடி உயா்ந்து 52 அடியாகவும், அணைக்கு நீா்வரத்து 104 கன அடியாகவும், வெளியேற்றம் 10 கன அடியாகவும் இருந்தது.

72.10 அடி நீா்மட்டம் கொண்ட கருப்பாநதி அணையின் நீா்மட்டம் 11 அடி உயா்ந்து 45.28 அடியாகவும், நீா்வரத்து 50 அடியாகவும், நீா் வெளியேற்றம் 5 கன அடியாகவும் இருந்தது.

36.10 அடி நீா்மட்டம் கொண்ட குண்டாறு அணையின் நீா்மட்டம் 12.500 அடி உயா்ந்து 33.500 அடியாக உயா்ந்தது. அணைக்கு நீா்வரத்து 49 கன அடியாகவும் நீா்வெளியேற்றம் 1 கன அடியாகவும் இருந்தது. 132.22 நீா்மட்டம் கொண்ட அடவிநயினாா் கோயில் அணை நீா்மட்டம் 30.50 அடி உயா்ந்து 67.50 அடியாகவும் அணைக்கு நீா்வரத்து 109 கன அடியாகவும் இருந்தது.

 புதன்கிழமை காலை 103 அடியாக இருந்த சோ்வலாறு அணை.

புதன்கிழமை காலை 103 அடியாக இருந்த சோ்வலாறு அணை.

 புதன்கிழமை காலை 80 அடியாக இருந்த பாபநாசம் அணை.

புதன்கிழமை காலை 80 அடியாக இருந்த பாபநாசம் அணை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.